முக்கிய கதாபாத்திரங்கள்:
1 . கேப்டன் பிரின்ஸ் குழு - பிரின்ஸ், பார்னே,
பொடியன் ஜின், கழுகு கப்பல் (பிரின்ஸ் குழுவையும் பிரின்ஸ் கதைகளை
விரும்பிப் படிப்பவர்கள் அனைவருக்கும் கழுகு ஓர் உயிரற்ற பொருள் அல்ல)

2 . மேஜர் லீ
3 . வாங் ஓ (ஜெனரல் சைத்தான்) & லோட்டஸ்

கதை:
வண்ண மேகக் கோட்டை - மூன்று கிராமிய பகுதிகளின் பாதுகாப்பிற்காக ராணுவத்தால் அமைக்கப்பட்டது. வில்லன் வாங் ஓ மூன்று கிராம மக்கள் வசிக்கும் அந்த பகுதி முழுதும் அவன் ஆதிக்கத்தின் கீழ்
கொண்டு வரும் நோக்குடன் வண்ண மேகக் கோட்டையை கைப்பற்ற எண்ணுகிறான். எனவே
அந்த கோட்டைக்கு ஆயுதம் மற்றும் உணவுப்பொருட்கள் கிடைப்பதை தடுக்கும்
வகையில் அப்பகுதியில் தனது படையை (கும்பலை) நிறுத்தி இடையூறு
விளைவிக்கிறான்.
இதனை தடுக்க மேஜர் லீ வண்ண மேகக் கோட்டைக்கு ஆயுதம் மற்றும் உணவுப்பொருட்களை கழுகு கப்பலின் மூலம் கொண்டு செல்ல மறைமுகமாக வேண்டுகோள் என்ற பெயரில் (பிரின்சின் LICENSE -ஐ கைப்பற்றிக்கொண்டு) கேப்டன் பிரின்சை நிர்பந்திக்க, கேப்டன் பிரின்ஸ் வேறு வழியில்லாமல் மேஜர் லீயின் வேண்டுகோளுக்கு இணங்கி வண்ண மேகக் கோட்டையை நோக்கி ஆயுதம் மற்றும் உணவுப்பொருட்களுடன் பயணத்தை ஆரம்பிக்கிறார்.
கிளம்பும் முன் பிரின்ஸ் தன் பொறுப்பில் இருக்கும் பொடியன் ஜின்னை, தான் திரும்பாவிட்டால் அவனது பிரெஞ்சு பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு கூறிவிட்டு செல்கிறார்.
பிரின்ஸ் கிளம்பிய தகவல் வாங் ஓவை அடைகிறது. வாங் ஓ பிரின்சின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறான்.
வண்ண மேகக் கோட்டையை அடைய டைக்ரி வளைகுடா வழியாக செல்வதே வாடிக்கையான வழித்தடம் ஆனால் பிரின்ஸ் எதிரியின் திட்டத்தை முன்கூட்டியே அனுமானித்து, வேறு திட்டமிட, பிரின்சின் திட்டப்படி கழுகு ரிக்வின் வளைகுடா வழியாக பயணிக்கிறது. வாங் ஓ கப்பலை டைக்ரி வளைகுடா பகுதியில் எதிர்பார்க்க, பிரின்ஸ் தனது குழுவுடன் ரிக்வின் வளைகுடா வழியாக சென்று, இறுதியில் டைக்ரி வளைகுடாவின் உள்கரைப்பகுதியை அடைந்து, அங்கிருந்து பொருட்களை இராணுவத்தின் பீரங்கிப் பாதுகாப்புடன் கோட்டைக்கு கொண்டு சேர்ப்பதே பிரின்சின் திட்டம். இதற்கிடையே பொடியன் ஜின் பிரின்சை ஏமாற்றி கழுகில் அவர்களுடனே இருப்பதை கண்டு பிடிக்க (இது போன்ற ஆபத்தான சமயங்களில் ஜின்னை பிரின்ஸ் கழட்டி விடுவதும், அவன் இப்படி ஏதாவது சேஷ்டை செய்து ப்ரின்சிற்கு தெரியாமல் தொற்றிக்கொள்வதும் வாடிக்கை), "கழுகு" பிரின்ஸ், பார்னே, பொடியன் ஜின் ஆகியோருடன் பயணிக்கிறது.
தான் வழித்தடத்தை மாற்றி ரிக்வின் வளைகுடா வழியாக வருவதை வாங் ஓ தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காகவும், வாடிக்கையான வழித்தடத்திலேயே வந்து கொண்டிருப்பதை நம்ப வைப்பதற்காகவும் பிரின்ஸ் ஒரு காரியம் செய்கிறார்.
ரேடியோ மூலம் தான் டைக்ரி வளைகுடாவின் வழியாக சரக்குகளுடன் வந்து கொண்டிருப்பதாகவும், தனக்கு பாதுகப்பளிக்கவும் செய்தி அனுப்புகிறார். கோட்டையில் உள்ள அனைவரும் பிரின்ஸ் சரியான முட்டாள் என்று எண்ணுகிறார்கள். பிரின்ஸ் எதிர்பார்த்தது போலவே தகவல் வாங் ஓவையும் அடைகிறது.
ஆனால் தனது ஆட்கள் போலல்லாமல் வாங் ஓ பிரின்சின் இந்த உத்தியை மிக எளிதாக எடை போட்டு ரிக்வின் வளைகுடா பக்கமும் தனது படைகளை நிறுத்துகிறான்.
கழுகு எதிரிகளால் துரத்தப்படுகிறது. எதிரிகளிடம் மிகவிரைவிலேயே பிடிபடக்கூடிய இக்கட்டான சூழலில் பிரின்ஸ் கப்பலின் பாரத்தைக் குறைக்க திட்டமிடுகிறார். ஆனால் பார்னே சரக்குகள் நன்கு கட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்க, பின் பெட்ரோல் பாரல்களை கப்பலின் மேல் தளத்திற்கு கொண்டு வந்து ஆறு பாரல் (ஒவ்வொரு பாராலும் 100 லி) பெட்ரோலையும் கடலில் கொட்டி, "கடலையே தீப்பற்ற வைக்கிறது" பிரின்ஸ் குழு. எதிரிகளுக்கும் கழுகு கப்பலுக்கும் இடையே தீ அரணாக நின்று காக்கிறது. இந்த இடைவெளியில் பிரின்ஸ் குழு எதிரிகளிடமிருந்து தப்பித்து செல்கிறது.
பிரின்ஸ் குழு பற்றவைத்த தீயில் கட்டளையை மீறி பின்வாங்கிய வாங் ஓவின் ஆட்களுடைய படகு ஒன்றும் தீக்கிரையாகிறது. அதில் தப்பித்து தனது கப்பலை நோக்கி நீந்தி வரும் தனது ஆட்களையே "ஜெனரல் சைத்தான்" என்ற தனது பட்டப்பெயருக்கு ஏற்ப கொன்று குவிக்க ஆணையிடுகிறான் வாங் ஓ. ஆனால் அதிலிருந்து ஒருவன் தப்பிப்பிழைத்து பிரின்ஸ் குழுவுடன் இணைந்து கொள்கிறான்.
பிரின்ஸ் குழு கரை ஒதுங்கிய இடத்திருக்கு மறுப்பக்கத்தில் அவர்கள் சென்று சேர வேண்டிய டைக்ரி வளைகுடா உள்ளது. ஆனால் அதை அவர்கள் நிலப்பகுதி வழியாக சரக்குகளுடன் கடந்து செல்ல வேண்டும். இந்நிலையில் வாங் ஒவிடமிருந்து தப்பி பிரின்ஸ் குழுவிடம் தஞ்சமடைந்தவன் அவர்களுக்கு கைவிடப்பட்ட பழைய சுரங்கத்தில் எப்பொழுதோ தனது பயணத்தை நிறுத்தி விட்ட ஓர் பழைய ரயில் வண்டியைக் காட்டுகிறான். பின் அவன் தன் வழியில் சென்று விட பிரின்ஸ் குழு அந்த ரயில் வண்டியை கிளப்ப முயற்சி செய்கிறது.
ஒரு வழியாக அந்த வண்டி ஆயத்தமாக, சரக்குகளுடன் மறுமுனையை நோக்கி பிரின்ஸ் குழுவின் பயணம் தொடர்கிறது. ஆனால் இன்னும் அவர்களை விட்டு ஆபத்து நீங்கவில்லை.
வாங் ஒ, பிரின்ஸ் குழு அந்த கைவிடப்பட்ட ரயிலை கிளப்பிக்கொண்டு வருவார்கள் என்பதை முன்கூட்டியே யூகித்து தனது குழுவினரை பிரின்ஸ் குழுவை வழியில் மடக்க அனுப்புகிறான்.
எதிரே உள்ள ஆபத்து தெரியாமல் பிரின்ஸ் குழுவினரின் ரயில் வாங் ஓவின் கும்பல் காத்திருக்கும் இடத்தை அடைகிறது. ரயிலின் மேல்பகுதியில் அமர்ந்திருக்கும் ஜின்னை வாங் ஓவின் ஆள் குறி வைக்கிறான். ஆனால் அவர்கள் குழுவில் உள்ள லோட்டஸ் எனும் பெண், சிறுபையனை தாக்குவதை பொறுக்க முடியாமல் சுடுவதைத் தடுத்து ஜின்னை காப்பாற்றுகிறாள்.
அப்பொழுது கைமாறும் இயந்திரத்துப்பாக்கி பார்னேவின் கையில் கிடைக்கிறது. பார்னே வாங் ஓவின் ஆட்களை தாக்க ஆரம்பிக்க, பிரின்ஸ் அந்த கும்பலில் தங்கள் குழுவிற்கு உதவி செய்தவர் யாரோ இருப்பதை அறிந்து பார்னேவைத் தடுக்கிறார். பின் லோட்டஸ் பிரின்ஸ் குழுவுடன் இணைகிறாள்.
சிறிது தூரம் கடந்தவுடன் மீண்டும் வாங் ஓவின் இன்னொரு குழு பிரின்சின் ரயிலை சுற்றி வளைக்கிறது.
தப்பிக்க வழியில்லாமல் நன்றாக மாட்டிகொள்கிறார்கள் பிரின்ஸ் குழுவினர். சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் பிரின்ஸ் ரயிலின் நீராவி என்ஜினை திறந்து விட்டு புகை மண்டலத்தை ஏற்ப்படுத்துகிறார். புகையினூடே புகுந்து ரயில் அந்த கும்பலிடமிருந்து தப்புகிறது. இந்த களேபரத்தில் லோட்டசிற்க்கு சிறிதாக காயமேற்ப்படுகிறது. அனைத்து தடைகளையும் தாண்டி மீண்டும் ரயில் பயணத்தைத் தொடர்கிறது.
பிரின்ஸ் குழுவினரை தனது கும்பல் கோட்டை விட்ட தகவல் வாங் ஒவை எட்டுகிறது.
இதற்கிடையில் மேஜர் லீ நிலைமையை அறிய அப்பகுதிக்கு வானில் பறந்தபடியே நோட்டமிடுகிறார். பிரின்ஸ் குழு டைக்ரி வளைகுடா நோக்கி சென்று கொண்டிருப்பதைக்கண்டவுடன், வாங் ஒ தாக்குவதற்கு தயாராக உள்ளது தெரியாமல் கோட்டைக்கு சென்று தனது படைவீரர்களுக்கு தகவல் அளிக்கிறார்.
பிரின்ஸ் குழு ஆரம்பத்தில் ரேடியோவில் கேட்டுக்கொண்டதற்கிணங்க வண்ண மேகக் கோட்டையின் படை வீரர்கள் பிரின்சை சந்தித்து சரக்குகளைப் பெற்றுக்கொள்ள டைக்ரி வளைகுடாவை நோக்கி கப்பல்களில் கிளம்புகிறது.
மேடான நிலப்பகுதியில் பிரின்ஸ் ரயிலில் சரக்குகளுடன் வந்து கொண்டிருக்க, நேர் கிழே கடல் படுகையில் வாங் ஒ பிரின்சையும் வண்ண மேகக் கோட்டையின் படை வீரர்களையும் எதிர்கொண்டு தாக்கி அழிக்க காத்திருக்கிறான்.
வாங் ஒவின் படைகளை கடைசி நிமிடத்தில் கண்டுகொள்ளும் பிரின்ஸ் அவனின் கொடூரமான எண்ணவோட்டத்தையும் அறிகிறார்.
சரக்கையும் பத்திரமாக சேர்க்க வேண்டும் அதே நேரத்தில் வாங் ஓவின் சூழ்ச்சி வலையில் விழ வந்து கொண்டிருக்கும் படையினரையும் காக்க வேண்டும். ஒன்றும் செய்ய இயலா நிலைமையில் பிரின்ஸ்.
இங்கே ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும் பிரின்சின் குழுவில் உள்ள பார்னேவிற்கும் நமது டெக்ஸ் வில்லர் குழுவில் உள்ள கார்சனுக்கும் (என்னைப்பொறுத்தவரை) ஒரு ஒற்றுமை உண்டு. இருவருமே புலம்பல் பார்ட்டிகள்.
இந்த நிலையில் பார்னே கூறும் ஒரு வசனம் "ஒரு பெரிய பாறாங்கல்லைத் தூக்கி அவன் (வாங் ஓ) தலையில் போட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்".
இதைக்கேட்ட ப்ரின்சிற்க்கு உடனடியாக ஒரு திட்டம் தோன்றுகிறது.
அதன்படி நேர் கீழே காத்திருக்கும் வாங் ஓவின் படகை நோக்கி ரயில் வண்டியை கிளப்பி விட்டு அதிலிருந்து வெளியில் குதிக்க, ஆட்கள் மற்றும் சரக்குகள் ஏதுமற்ற ரயில் ஓடிச்சென்று மேலே இருந்து நேராக வாங் ஓவின் ஒட்டுமொத்த கும்பல் அடங்கிய கப்பலின் மேல் விழுகிறது. வாங் ஓவின் படகு கடலில் மூழ்குகிறது.
இதன் பின் சொல்லவும் வேண்டுமா? டைக்ரி வளைகுடா வந்தடையும் படைவீரர்கள் சரக்குகளை கோட்டைக்கு கொண்டு செல்ல, லோட்டஸ் தன் வழியில் தனித்துச் செல்ல, பிரின்ஸ் குழு தங்கள் சாகஸப் பயணத்தை தொடர்கிறார்கள்.
நான் ரசித்தவை:
கதையில் பொடியன் ஜின் ப்ரின்சிற்கு தெரியாமல் கப்பலில் ஒளிந்து கொள்வதும்,
பின்னர் மாட்டிக்கொள்ளும் பொழுது ப்ரின்சால் செல்லமாக தண்டிக்கப்படுவதும் (காதை திருகுவது)
மிகவும் அருமையான இடம்.
ப்ரின்ஸும் பார்னேயும் சேர்ந்து கடலை தீப்பற்றச் செய்யும் இடம்.
முதன் முதலாக கைவிடப்பட்ட ரயில் காட்சிப்படுத்தப்படும் இடம்,
சித்திரம் மிகவும் பிரம்மாண்டமாக அழகாக இருக்கும்.
லோட்டஸ் ஜின்னை தனது கும்பல் சுடுவதைத் தடுக்கும் காட்சி,
வில்லியானாலும் லோட்டசின் பெண்ணுக்கே உரிய இரக்ககுணம் வெளிப்படும் இடம் அழகு.
இறுதியாக பிரின்ஸ் ரயிலை வாங் ஓவின் படகின் மேல் விழச்செய்யும் அதிரடியான இறுதிக்கட்டம்.
SUPER FINISHING.
இவ்வளவு நேரம் எனது சிறுபிள்ளைத்தனமான கதை விவரிக்கும் பாணியை பொறுத்துக்கொண்டு படித்து முடித்த/பாதியிலேயே கடுப்பாகி வெளிநடப்பு செய்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். THANK YOU FRIENDS .